ராமாயணா மூன்று வாரங்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
சினிமா
Ramayana 3 weeks Box office: ராமாயணா திரைப்படம் 3 வார முடிவில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ரூ. 2000 கோடி பட்ஜெட் என்பது இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய விஷயமாகும். அத்தகைய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்றால் அதற்கேற்ப மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் இருக்கும். அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த நவம்பர் 5-ஆம் நீதி வெளியான திரைப்படம்தான் ராமாயணா முதல் பாகம்.
தங்கல் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் இணைந்து நடித்திருந்தனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக CG வேலைகள் எல்லாம் வேற லெவல், இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.
ராமாயணா திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 3 வார முடிவில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை ராமாயணா திரைப்படம் உலகளவில் ரூ. 1700 கோடி வசூல் செய்துள்ளது.
பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படத்தின் மூன்று வார வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.






















