சுவிஸ் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
இலங்கை
Swiss Alps avalanche danger hits level 4 Nov. 23 from Valais to Glarus; the SLF advises against ski touring: சுவிஸ் ஆல்ப்ஸ் மலையின் சில பகுதிகளில் பனிப்பாறைச் சரிவு அபாயம் அதிகம் உள்ளதாக சுவிஸ் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
சுவிஸ் ஆல்ப்ஸ் மலையின் சில பகுதிகளில் பனிப்பாறைச் சரிவு அபாயம் உள்ளதாக சுவிஸ் பனிச்சரிவு ஆய்வு நிறுவனமான SLF எச்சரித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 23ஆம் திகதி, Valais ஆல்ப்ஸ் முதல் Glarus ஆல்ப்ஸ் வரையிலான பகுதிகளில், அபாய மட்டம் 4 அளவில், பனிப்பாறைச் சரிவு ஏற்படக்கூடும் என சுவிஸ் பனிச்சரிவு ஆய்வு நிறுவனமான SLF எச்சரித்துள்ளது.
அத்துடன், வடக்கு Graubünden பகுதியில் அபாய மட்டம் 3 அளவிலும் தெற்கு Graubünden பகுதியில் அபாய மட்டம் 2 அளவிலும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பனி அதிக அளவில் பெய்ததே இந்த அபாய நிலை அதிகரிக்கக் காரணம் ஆகும்.
நேற்று அதிக அளவில் பனி பெய்ததைத் தொடர்ந்து Graubünden மாகாணத்திலுள்ள Bernina கணவாய்ப் பகுதியில், பல கார்கள் சாலையிலிருந்து வழுக்கிச் சென்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
Valais ஆல்ப்ஸ் முதல் Glarus ஆல்ப்ஸ் வரையிலான பகுதிகளில், அபாய மட்டம் 4 அளவில் உள்ள நிலையில், அங்கு பனிச்சறுக்கு செய்வதால் பனிப்பாறைச் சரிவு தூண்டப்படலாம்.
ஆகவே, அப்பகுதிக்கு சுற்றுலா செல்வது அபாயகரமானது என்பதால் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
SLFஇன் அபாய அளவுகோலில், மட்டம் 4 என்பது, பனி அடுக்கு மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதை குறிக்கிறது.
இந்த மட்டத்தில் பல செங்குத்தான சரிவுகளில் எளிதில் மிகப்பெரிய பனிச்சரிவு தூண்டப்படலாம்.
நிலையற்ற பனிப்படலம் மற்றும் செங்குத்தான சரிவுகளில் எளிதில் பனிச்சரிவு தூண்டப்படுவதால், பனிச்சரிவுப் பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகவும் அபாயகரமான நிலை என SLF குறிப்பிடுகிறது.
எலாவற்றிற்கும் மேல், பனிச்சரிவு மரணங்களில் சுமார் பாதி, 3ஆவது மட்டத்திலும், சுமார் 10 சதவிகிதம், 4ஆவது மட்டத்திலும் நிகழ்கின்றன என்கிறது SLF ஆய்வு நிறுவனம்.





















