• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாகன சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர அறிவிப்பு

இலங்கை

புதிய களனி பாலத்திற்கும் துறைமுக அணுகல் மேம்பாலத்திற்கும் இடையிலான இணைப்புப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகள் காரணமாக, இங்குருகடை இடைமாற்றுப் பாதையின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் இன்று (23) முதல் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை அவ்வப்போது தற்காலிகமாக மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) அறிவித்துள்ளது.

இதன்படி, இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில், குறித்த பாதைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் வெவ்வேறு நேர இடைவெளிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கட்டுநாயக்க மற்றும் கண்டி திசைகளிலிருந்து இங்குருகடை சந்தி அல்லது கொழும்பு துறைமுகம் நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் பேலியகொடை அல்லது ஒருகொடவத்தை வெளியேறும் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, ஒருகொடவத்தையிலிருந்து கொழும்பு துறைமுகம் அல்லது இங்குருகடை சந்தி நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், புதிய களனி பாலம் பகுதியில் உள்ள தரைவழிப் பாதையைப் பயன்படுத்தி பேலியகொடை நுழைவுப் பாதையினூடாகப் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பொரளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும் புதிய களனி பாலம் பகுதியில் அமைந்துள்ள தரைவழிப் பாதையைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a Reply