• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

இலங்கை

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்று (23) இரவு 11 மணி முதல் நாளை (24) அதிகாலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) அறிவித்துள்ளது.

இதன்படி, சுமார் ஏழு மணித்தியாலங்கள் குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வீதியின் மீது விழும் அபாயம் காணப்படும் பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கும், அதனுடன் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதுடன், தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கை மையம் ஊடாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த காலப்பகுதியில் கொழும்பு – கண்டி இடையே பயணிக்கவுள்ள வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தமது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதுடன், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply