• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு வருடத்திற்கும் மேல் திரையரங்கில் ஓடிய படம் - 37 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகும் கரகாட்டக்காரன் 

சினிமா

karakattakaran re release: ராமராஜன், கனகா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் உருவாகி 1989-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படம் 37 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரீ-ரிலீஸ் ஆகிறது. அதை பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

இசைஞானியின் இசையில் ராமராஜன், கனகா நடிப்பில் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படத்தை இயக்குநர் கங்கை அமரன் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வாகை சந்திரசேகர், காந்திமதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1989-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஓராண்டிற்கும் மேல் திரையரங்குகளில் ஓடியதாக கூறப்படுகிறது.

பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், சுவாரஸ்யமான திரைக்கதை என கரகாட்டக்காரன் திரைப்படம் இன்று வரை மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாழைப்பழ நகைச்சுவை எல்லாம் வேற லெவல்.

இந்த நிலையில், 1989-ஆம் ஆண்டு வசூலில் புரட்சி செய்த கரகாட்டக்காரன் திரைப்படம், 37 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சினிமாஸ்கோப், DTS ஒலியுடன் புதுப்பிக்கப்பட்டு, விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு செம மகிழ்ச்சியை தந்துள்ளது.
 

Leave a Reply