• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய அர்னாப் – பலத்த மழை எச்சரிக்கை

இலங்கை

மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த “அர்னாப்” (Arnab) எனும் கடுமையான சூறாவளி, மேலும் வலுவடைந்து ‘மிகக் கடுமையான சூறாவளியாக மாறியுள்ளது. 

இன்று (27) அன்று அதிகாலை 2.30 மணிக்கு இது வட அகலாங்கு 15.9°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 85.4° இற்கும் அருகில், காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 890 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. 

இது இன்று மாலை 5.30 மணி வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பின்னர் வடமேற்கு திசையிலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில், இந்த மிகக் கடுமையான சூறாவளி ஆந்திரப் பிரதேச கடற்கரை வழியாக இந்திய நிலப்பகுதியை வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதனுடன் தொடர்புடைய காற்று வீச்சு இலங்கையின் குறுக்கே நீடிப்பதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்யும் சூழல் இன்றும் தொடரும். இலங்கைசெய்திகள்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

இப்பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிழக்கு மாகாணத்தில், பிற்பகல் 1.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும்; காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ ஆக இருக்கும்.

கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வழியாக முல்லைத்தீவு வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வழியாக முல்லைத்தீவு வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கலாம்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில், அலையின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீட்டர்கள் வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று (மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில்) வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.
 

Leave a Reply