• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவில் வெள்ள அபாயம் - சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை 

திபெத்தில், சீனா கட்டி வரும் பிரமாண்ட அணையால் இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்டை நாடான சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக திபெத் செயல்பட்டு வருகிறது.

திபெத்தில் உற்பத்தியாகி பாயும் யர்லுங் தசாங்போ நதி இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நுழையும்போது பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.

திபெத்தின் தென்கிழக்கில் இந்திய எல்லைக்கு அருகில் உள்ள மோடோக் என்ற ஆழமான பள்ளத்தாக்கு பகுதியில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 1,600 கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்டி வருகிறது.

இந்நிலையில் இந்த அணை கட்டப்பட்டால், நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்படும் என சீன அறிவியல் அகாடமி மற்றும் யுனான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

யர்லுங் தசாங்போ நதியின் நீர்வரத்து 1325 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த தன்மையை ஆய்வு செய்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

அணை கட்டப்பட்ட பிற்பாடு அதில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்போது அதிக மழை பெய்தால் மதகுகள் திடீரென திறக்கப்பட வாய்ப்புண்டு.

அவ்வாறு திடீரென திறந்துவிடப்படும் தண்ணீர், கீழ்நோக்கி உள்ள இந்தியா மற்றும் வங்கதேச பகுதிகளில் வசிக்கும் மக்களை கடுமையாக பாதிக்கும் என கருதப்படுகிறது.

உலக சராசரியை விட இரு மடங்கு வேகமாக இமயமலைப் பகுதியில் உள்ள திபெத் பீடபூமி வெப்பமடைந்து வருகிறது.

எனவே அங்குள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட மிக வேகமாக உருகி வருகிறது. இதன் விளைவாக அண்மையில் நேபாளத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதைப்போன்ற பெருவெள்ளம், சீனா காட்டிவரும் அணையினால் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வளார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அணை கட்டப்பட்டு வரும் இடம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதாலும் அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply