தற்போது யார் ஆட்சி செய்கிறார்கள் ஈரானின் தலைவர்கள் சென்றுவிட்டனர் - சர்ச்சையை கிளப்பும் ட்ரம்ப்
ஈரானை தற்போது யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அந்நாட்டின் தலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: ஈரானில் தற்போது அதிகாரம் யார் வசம் உள்ளது என்பது தெளிவாக இல்லை.
அவர்கள் தலைவர்கள் சென்றுவிட்டனர் இரண்டம் கட்ட தலைவர்களும் இல்லை. எனவே மிகப்பெரும் பிரச்சினையாக தற்போது இருப்பது அந்த நாட்டை யார் வழிநடத்துகிறார்கள் என்பதே.”என்றார்.
தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சியில் ட்ரம்ப் பேசியதாவது: ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஈரானின் ராணுவம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா விரைவில் முடிவு எடுக்கும். ஈரான் அணு ஆயுதத்தைப் பெற அமெரிக்கா அனுமதிக்காது ” என்றார்.
இதனிடையே, ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனில், அந்நாடு தனது அணு எரிபொருள் செறிவூட்டும் திறனை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருநாடுகளுகும் இடையேயான மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மற்றும் முன்மொழிவுகள் பரிமாறப்பட்டு வரும் நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது






















