ராமாயணா - கோசல நாட்டின் மன்னர் அறிமுகம்
சினிமா
ராமாயணா படத்தின் ‘மன்னர் தசரதன்’ கதாபாத்திர அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தசரதன் கதாபாத்திரத்தில் ‘ராமாயணம்’ தொடர் புகழ் அருண் கோவில் நடித்துள்ளார்.
1987-ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடரில் ராமராக நடித்து புகழ்பெற்றவர் அருண் கோவில்.
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையொட்டி நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாக உள்ளப் படம் ராமாயணா. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.
சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங்கும், தசரத மன்னராக அருண் கோவிலும் நடித்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்தாண்டும், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும் வெளியாகிறது. முதல் பாகம் இந்தாண்டு நவ.6ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டிரெய்லர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாலிவுட் புகழ் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.






















