நான்கு மாத சரிவுக்கு பின் மீண்டும் அதிகரித்த இலங்கையின் நடப்புக் கணக்கு
இலங்கை
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பிறகு, இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு 2026 ஆகஸ்டில் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் நடப்புக் கணக்கில் 133 மில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளது.
இது நாட்டின் வெளித்துறை செயல்திறனில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
தொழிலாளர்களின் பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து வலுவான ஆதரவை அளித்து, ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 10வீதம் அதிகரித்து 749 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
மொத்த அதிகார பூர்வ கையிருப்பு ஆகஸ்ட் 2026 இறுதிக்குள் 6.9 பில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
சுற்றுலாத் துறை ஆண்டுக்கு ஆண்டு சரிவைப் பதிவுசெய்தது, ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடும்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 3.3வீதம் குறைந்துள்ளது.
மத்திய வங்கியின் தகவல்படி, இலங்கை ரூபாயும் அழுத்தத்தில் நீடித்ததுடன், நடப்பு ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக 6.3வீத மதிப்பு இழந்துள்ளது.
ஆகஸ்ட் 2026ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் வெளித்துறை செயல்திறன் அறிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.





















