யாழ்ப்பாணத்தில் பல நாள் ஆட்டம் காட்டியவர் சிக்கினார்
இலங்கை
யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை ஒன்று களவாடப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அந்த வகையில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை சுன்னாகப் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து 5 தொலைபேசிகள், ஒரு தொகை பணம் மற்றும் 2 கிராம் 820 மில்லிகாிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பதை மீட்கப்பட்டுள்ளன.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட தொலைபேசிகளில் 3 கைபேசிகள் மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் திருடப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மற்றைய கைபேசிகள் யாருடையது என தெரியவராத நிலையில் அதன் உரிமையாளர்கள் அடையாளத்தை காண்பித்து தமது பொருட்களை பெற்றுச் செல்ல முடியும் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றம் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






















