• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகளாவிய உணவு சந்தையில் தாக்கம் - ரஷ்ய தானிய துறைமுகம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் முக்கிய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டு இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய துறைமுகமான நோவோரோசிஸ்க்(Novorossiysk) மீது உக்ரைன் இரவோடு இரவாக மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் முக்கிய தானிய ஏற்றுமதி மையமான நோவோரோசிஸ்க் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக அங்குள்ள 3 முக்கிய தானிய முனையங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

உக்ரைன் நடத்திய தாக்குதலில் துறைமுகத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய உணவு சந்தையில் தாக்கம்

உலக தேவையில் கிட்டத்தட்ட 25% கோதுமை ஏற்றுமதியை உக்ரைனும், ரஷ்யாவும் இணைந்து பங்களிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல் பாதைகள் மற்றும் துறைமுகங்கள் மீது தாக்குதல் அதிகரித்து இருப்பதால் சர்வதேச அளவில் உலகளாவிய உணவு விநியோகம் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

இந்த மோதல்களை பிரதிபலிக்கும் விதமாக சிகாகோ கோதுமை எதிர்கால வர்த்தகம் 4% வரை உயர்ந்துள்ளது.
 

Leave a Reply