• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன

இலங்கை

பொல்கொல்ல மகாவலி அணையின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், மகாவலி அணையின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகளை தலா இரண்டு அடி அளவுக்குத் திறக்க இன்று (02) நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களைப் பாதித்துள்ள கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நீர் வெளியேற்றும் கதவுகள் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வினாடிக்கு 3,940 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்குள் வெளியேற்றப்படும் என்று பொல்கொல்ல மகாவலி அணையின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மகாவலி ஆற்றின் கீழ் பகுதிகளிலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply