• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்

இலங்கை

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

குறித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கைதிகள் குழு நேற்றிரவு முழுவதும் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பாதுகாப்புப் படையினரால் அவ்வாறான திட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.இன்று (02) முற்பகல் அளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சிறைச்சாலையினுள் நிலவிய சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
 

Leave a Reply