இலங்கையில் மழை மேலும் தீவிரமடையும் - ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை
இலங்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும், அது படிப்படியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் மழையை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (22) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற எதிர்கால வானிலை நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையை சூழ இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயம் (ITCZ) காணப்படுவதுடன், சில பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதுடன், நாளைய தினத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாள் முழுவதும் மழை நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயத்தின் செல்வாக்கு காரணமாக, ஒக்டோபர் 23 ஆம் திகதியளவில் அந்தமான் தீவுகளைச் சூழ குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என அவர் கூறுகிறார்.
இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்றபோதிலும், காற்றுப் ஓட்டம் இலங்கை ஊடாக வீசுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழை நிலைமை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கும் என பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார். தீவுகள்ஆராயுங்கள்
இது தவிர, வங்காளக் குடாக் கடலின் ஆழ்கடல் பகுதியில் காணப்படும் குறைந்த அழுத்த நிலைமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் வங்காளக் விரிகுடாக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக பலநாள் மீன்பிடிப் படகுகளை இயக்குபவர்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வரவிருக்கும் வானிலை அறிவித்தல்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.






















