• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலவாக்கலையில் மரம் முறிவு – போக்குவரத்து பாதிப்பு

இலங்கை

மலையகப் பகுதிகளில் தொடர் மழை,  பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கடுமையான மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (02) காலை முதல் கடும் மழை மற்றும் காற்று காரணமாக வீதிகளில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது தலவாக்கலை

சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதேச வாசிகளுடன் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் முதல் நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு வரையிலான பிரதான வீதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் மலைப்பிரதேசங்கள் மற்றும் பிரதான வீதிகளில் பயணம் செய்யும் போது சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a Reply