• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்

ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய அவசரநிலையை அறிவித்தனர்.

எல்லையைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்புமாறு வியாழக்கிழமை (31) மாட்ரிட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் பிரதேசங்களைப் பிரிக்கும் கடல்தடுப்புச் சுவர்களைச் சுற்றி நடந்து செல்லவும், எல்லை வேலியை ஏறிக் கடக்கவும் மக்கள் கூட்டம் முயற்சிக்கும் காட்சிகள் காணொளிகளில் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நிலைமையை சமாளிக்க “உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளிப்பதற்காக, தங்கள் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பணியாளர்களைச் சியூட்டாவிற்கு (Ceuta) அனுப்பவுள்ளதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சு வியாழக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்தது.

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மற்றொரு ஸ்பானியத் தன்னாட்சி நகரமான மெலில்லாவுடன் (Melilla) சேர்த்து, சியூட்டா (Ceuta) நகரமும் ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாகத் திகழ்கிறது. இந் நிலையில் ஐரோப்பாவை அடைய முற்படும் புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக நுழைய முயற்சிக்கும் நிகழ்வுகள், அவ்வப்போது இவ்விரு நகரங்களிலும் அதிகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply