மன்னிப்பு கேட்ட கோபி, சுதாகர் - எதிர்ப்பு வந்ததால் அந்த காட்சி நீக்கம்
சினிமா
Youtubeல் பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இருவரும் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். அதே நேரத்தில் Youtubeல் அவர்கள் மற்றவர்களை நக்கல் செய்து வெளியிடும் வீடியோக்களுக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் திமுக எம்எல்ஏ மகன் பேசும் விதத்தை விமர்சிக்கும் வகையில் பரிதாபங்கள் வீடியோவில் ஒரு காட்சி இடம்பெற்று இருந்தது.
மன்னிப்பு.. நீக்கம்
அந்த காட்சிக்கு திமுகவை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.
மேலும் மற்றவர்கள் மனம் புண்படுவதால் அந்த காட்சியை வீடியோவில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.























