விற்பனை இலக்கை எட்டாத ஊழியர் முகத்தில் கிறீம் பூசி சித்திரவதை
அமெரிக்காவில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக பிரபல நிறுவனத்தின் மேலாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மாதத்தின் மிகக் குறைந்த விற்பனை செய்த ஊழியரை அலுவலகத்தின் பின்பகுதியில் நாற்காலியில் கட்டிவைத்து, அதிக விற்பனை செய்த ஊழியரைக் கொண்டு அவரது முகத்தில் பையை அடிப்பதை மேலாளர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீடு குறைவாகக் கிடைக்கும் ஊழியர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை மேலாளர் பீட்டர்சன் தானே காணொளி எடுத்ததுடன், சக ஊழியர்களையும் நிழற்படம் எடுக்க வற்புறுத்தியுள்ளார்.
விற்பனையை உயர்த்தவே இந்த முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு கேட்டுள்ளார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த நிறுவனம், தங்கள் கடைகளில் ஊழியர்களை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் சகிப்புத்தன்மை கிடையாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.





















