மூட நம்பிக்கை - சீனாவில் உயிரிழந்தவருடன் புதைக்கப்பட்ட 1.49 கோடி ரூபாய் கார்
சீனாவில் உயிரிழந்த ஒரு நபர் ஒருவரின் இறுதிச் சடங்கின் போது சுமார் 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) சொகுசு சிற்றூந்து ஒன்றுடன் சேர்த்துப் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இணையதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஒரு நபர் தனது மறு உலக வாழ்க்கையில் பயன்படுத்துவார் என்ற வினோதமான நம்பிக்கையில், மெர்சிடிஸ்-பென்ஸ் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சீன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரைக் கண்டித்துள்ளனர்.
மேலும், இத்தகைய மூடநம்பிக்கை சார்ந்த செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன






















