திருமண நிகழ்வுக்காக இந்தியா வரும் டொனால்ட் டிரம்ப் மகன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தர வாய்ப்புள்ளது.
ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய அமெரிக்க தம்பதியினரின் உயர்மட்ட திருமணத்தில் கலந்து கொள்ள டிரம்ப் ஜூனியர் வருகை தரவுள்ளார்.
அவரது வருகையை முன்னிட்டு, அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் குழு ஏற்கனவே உதய்பூருக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திருமணம் வரலாற்று சிறப்புமிக்க ஜக் மந்திர் அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளது.























