அமெரிக்காவில் 5 வயது சிறுவனை பணயமாக வைத்த குடிவரவு அதிகாரிகள்
அமெரிக்காவின் மினியாபோலிஸில் குடிவரவு அதிகாரிகளின் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 05 வயது சிறுவன் (Liam Conejo Ramos) மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், டெக்சாஸில் உள்ள தடுப்பு காவல் மையத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் பாலர் பாடசாலையில் இருந்து திரும்பிய போது குடியேற்ற முகவர்கள் அவர்களை சுற்றிவளைத்துள்ளனர் இந்நிலையில் சிறுவனின் (Liam Conejo Ramos) தந்தையை கைது செய்ய சிறுவனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்து தந்தை தப்பியோடியதாகவும், இதனைத் தொடர்ந்து சிறுவனின் (Liam Conejo Ramos) பாதுகாப்பிற்காக முகவர் ஒருவர் அந்த இடத்தில் இருந்ததாகவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.
“ஈக்வடாரில் இருந்து வந்த சட்டவிரோத வெளிநாட்டவர்” என்று அடையாளம் காணப்பட்ட லியாமின் (Liam Conejo Ramos) தந்தை, சட்டப்பூர்வ புகலிட நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகக் குடும்ப வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிகாரிகளின் இந்த அடாவடிக்கை நடவடிக்கையானது சமூகப் பாதுகாப்பு குறித்து பாடசாலை அதிகாரிகளிடையே குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகிறது.






















