• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாபத்தால் 300 ஆண்டுகள் சாய்ந்திருக்கும் சிவன் கோவில் 

சினிமா

உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் சுமார் 4 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. ஆனால், வாரணாசியில் இருக்கும் இந்த கோயில் சுமார் 9 டிகிரி சாய்வாக உள்ளது.

மேலும் இது ஆண்டுதோறும் சாய்ந்து வருவதாகக் கூறுகின்றனர் இந்த கோயில் மேலும் மேலும் சாய்ந்து வருவதற்கு ஒரு சாபம்தான் காரணம் என்கிறார்கள்.

வாரணாசியில் மணிகர்ணிகா காட் மற்றும் சிந்தியா காட் இடையே ரத்னேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சாய்ந்ததற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன.

ராணி அஹில்யா பாய் ஹோல்கர் வாரணாசியில் கோயில்களை கட்டும்போது அந்த நேரத்தில் அவரது பணிப்பெண்களில் ஒருவரான ரத்னா பாயும் கோயில் கட்டுவதற்கு கடன் கொடுத்துள்ளார்.

பெரிய பங்கை கொடுத்த அந்த பணிப் பெண்ணின் பெயரான ரத்னா என்ற பெயரே கோயிலுக்கு வைத்ததைக் கேட்ட அஹில்யா இந்த கோயிலுக்கு சாபம் கொடுத்ததால்தான் நீரில் ஒரு பக்கம் மூழ்கியதாக சொல்கிறார்கள்.

மற்றொரு கதை, ராஜா மான்சிங்கின் வேலைக்காரரால் அவரது தாயார் ரத்னா பாய்க்காக கட்டப்பட்டது இந்த கோயில் என்று கூறப்படுகிறது. கோயில் கட்டப்பட்ட பிறகு அம்மாவின் கடனை அடைத்து விட்டதாக பெருமையுடன் அறிவித்தார்.

இந்த வார்த்தைகள் அவன் உதடுகளில் இருந்து வெளிப்பட்டவுடன் அன்னையின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது என்பதை காட்ட இக்கோயில் பின்னால் சாய்ந்தது என்று கூறுகின்றனர். 
 

Leave a Reply