• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாமலுக்கும் இன்னும் காலம் தேவை – மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியினர் எந்த செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவர்கள் பத்து கூட்டணிகளை அமைத்தாலும் தமக்கு எவ்வத பிரச்சனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் காலம் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று காலை ஜய ஸ்ரீ மகா போதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி பதிலும் பின்வருமாறு,

கேள்வி :-  ரணில் – பஷில் சந்திப்பு தொடர்பாக பஷில் என்ன கூறினார்?

பதில் :- அது பற்றி கேட்பதற்கு நான் இன்னும் பஷிலை சந்திக்கவில்லை.

கேள்வி :- ஸ்ரீலங்கா சுதந்தி கட்சி தற்போது நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. ஆதை நீங்கள் எவ்வாறு காண்கின்றீர்கள்?

பதில் :- கூடிய சீக்கிரம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வார்கள் என நினைக்கின்றேன்.

கேள்வி :- ஐக்கிய மக்கள் சக்தி புதிய கூட்டணியில் கைச்சாத்திட்டுள்ளது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் :- அவர்கள் என்ன செய்துக்கொண்டாலும் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. 10 கூட்டணிகள் அமைத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை.

கேள்வி :- மொட்டு கட்சியிலிருந்த சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டுள்ளார்கள். அதை நீங்கள் எவ்வாறு காண்கின்றீர்கள்?

பதில் – அது நல்லம்.

கேள்வி :- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிமசிங்க போட்டியிட போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. உங்கள் கட்சியிலிருந்து வேட்பார்கள் நிறுத்தப்படுவார்களா?

பதில் :- நிச்சயமாக. எமது கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார். அது யார் என்பதை இன்னும் நாம் தீர்மானிக்கவில்லை. ஆலோசித்து முடிவொன்றை எடுப்போம்.

கேள்வி :- அதுபோன்று நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றதே?

பதில் :- அவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

Leave a Reply