• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டாப் நடிகர் நிராகரித்த கதையில் நடிக்கும் சூர்யா.. இதுதான் சூர்யா 44 படத்தின் கதையா 

சினிமா

சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் படமும் வெளிவரவுள்ளது.

சூர்யாவின் 44வது படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளிவந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது. கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கிறார்.

கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் வேறு யார்யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை.

இந்த நிலையில், சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்ராஜ் நடிக்கவிருக்கும் படத்தின் கதையை முதலில் அவர் கூறியது நடிகர் விஜய்க்கு தானாம். முழு கதையையும் விஜய்க்கு கூறிய நிலையில், அவர் இந்த கதையில் நடிக்க நிராகரித்து விட்டார் என்பது போல் கூறப்படுகிறது.

அந்த கதையை தான் தற்போது சூர்யாவிடம் சொல்லி ஓகே செய்துள்ளாராம் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply