• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்கு வந்த சீனாவின் நான்கு ஆய்வுக் கப்பல்கள்

இலங்கை

சீனாவின் நான்கு ஆய்வுக் கப்பல்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பை அண்மித்த இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசித்துள்ளன.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்தியா பரிசோதிக்கவுள்ளதன் பின்புலத்திலேயே கப்பல்கள் இலங்கை கடற்பரப்பினை அண்மித்து இந்து சமுத்திரத்திற்குள் வந்துள்ளன. ஆகிய நான்கு ஆய்வுக் கப்பல்களே நங்கூரமிட்டுள்ளன.

Xiang Yang Hong என்ற பெயரைக் கொண்ட இரண்டு கப்பல்களும் Da Yang Hao கப்பலும் சமுத்திர ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளுடன் கூடிய கப்பல்களாகும்.

Yuan Wang 03 ஆய்வுக் கப்பலின் மூலம் செயற்கைக்கோள், ஏவுகணை மார்க்கங்களைக் கண்டறிய முடியும்.

Xiang Yang Hong 01 கப்பல் இலங்கையின் தென்மேற்கு Ninety East Ridge என அழைக்கப்படுகின்ற இடத்தில் நங்கூரமிட்டுள்ளதை செயற்கைக்கோள் தரவுகளின் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.

Xiang Yang Hong 03 கப்பல் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நங்கூரமிட்டுள்ளது.

Yuan Wang 03 கப்பல் இலங்கையின் தென்கிழக்கு கடலுக்கு அப்பால் 14 நாட்கள் நங்கூரமிட்டுள்ளது.

Da Yang Hao என்ற கப்பல் இலங்கைக்கு தெற்கே நங்கூரமிட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்தியா பரிசோதிக்கவுள்ள நிலையில், குறித்த நான்கு சீனக்கப்பல்களும் இந்து சமுத்திரத்தில் நங்கூரமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையொத்த சம்பவம் கடந்த மார்ச் 11 ஆம் திகதி பதிவானது. அன்றைய தினம் இந்தியா அக்னி 5 எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஒடிசா மாநிலத்தின் அப்துல் கலாம் ஏவுகணை தளத்திலிலிருந்து பரிசோதித்திருந்தது.

இந்திய பாதுகாப்பு ஆய்வு , அபிவிருத்தி ஒன்றியத்தினர் இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததுடன், இதன் வெற்றி தொடர்பில் பாரதப் பிரதமரும் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார்.

அக்னி 5 ஏவுகணையின் ஊடாக பல்வேறு இலக்குகளை ஒரே சந்தர்ப்பத்தில் தாக்க முடியும்.

அக்னி 5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதிக்கப்படுகின்றபோது, Xiang Yang Hong கப்பல் விசாகப்பட்டிணம் துறைமுகத்திற்கு அப்பால் 480 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக விமானங்கள் பறக்க இந்தியா தடை வித்துள்ள நிலையில், சீன கப்பல்கள் இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி 48 மணித்தியாலங்களுக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக பறப்பதற்கு இந்தியா குறித்த தடையை விதித்துள்ளது.

இதனிடையே, RV சமுத்ரா ரத்னாகர் என்ற ஆய்வுக் கப்பலை சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ள கடற்பகுதிக்கு அருகில் இந்தியா நிறுத்தி வைத்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

இந்திய கடற்படையினர் ஒரே சந்தர்ப்பத்தில் 11 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியப் பெருங்கடலில் நிலைநிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று தசாப்தங்களின் பின்னர் இந்தியா தனது நீர்மூழ்கிக் கப்பல்களின் திறனை வௌிப்படுத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கை தனது கடற்பரப்பிற்குள் ஆய்வுக் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு தடை விதித்திருந்த நிலையில், பின்னர் அந்த தீர்மானம் மாற்றம் பெற்றதை அடுத்து, இந்த நிலைமை ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Xiang Yang Hong ஆய்வுக்கப்பல் Sea of Srilanka எனப்படும் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், இலங்கை அதற்கு தடை விதித்தது. 
 

Leave a Reply