• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வறுமையை ஒழிக்க எகிப்து நாட்டின் திட்டம் இலங்கைக்கு?

இலங்கை

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் ஆயபநன ஆழளடநாவுடன் நேற்று (26) இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார்.

குறித்த கலந்துரையாடல் வர்த்தக அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யு.ஆ.P.ஆ.டீ அத்தபத்து மற்றும் வர்த்தக திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை-எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (துஊவுநுஊ) மற்றும் அமர்வுகள், உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்படக்கூடிய மிகவும் நிலையான நடவடிக்கைகள். ஏவ்வாறு நடைமுறையில் உள்ளன என்பன குறித்து விவாதிக்கப்பட்டது

இச்சந்திப்பில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ எகிப்தில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததுடன், அவ்வாறான இறக்குமதிக்கு ஆதரவளிக்கத் தூதுவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய தூதுவர் மொஸ்லி, எகிப்தில் வறுமையை ஒழிப்பதற்காக எகிப்து அரசாங்கம் “கண்ணியமான வாழ்க்கை” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வறுமை ஒழிப்பில் இரு நாடுகளும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply