• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேட்டையன் - புதுச்சேரியில் வேட்டி சட்டையில் கலக்கும் ரஜினி - வைரலாகும் வீடியோ

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170-வது படம் 'வேட்டையன்' . இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம், மும்பை பகுதிகளில் இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இப்படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் படத்தின் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் 7 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் ரஜினி வெளிநாட்டவருடன் சண்டையிடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன. இதில் கேரவேனில் இருந்து ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் 'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்ய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply