• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்னை இல்லத்தில் நடந்த படப்பிடிப்புகள் ..

சினிமா

சிவாஜி கணேசன் அன்னை இல்லம் என்று தன் மாளிகைக்கு  பெயர் வைத்தார் .அதன் பெயரில் திரைப்படமும் எடுத்தார்.
அவர் பெயர் வைத்த ராசியோ என்னமோ ஆயிரம் அன்னை இல்லங்கள் தமிழகத்தில் உருவாயின.ஆயிரம் இருந்தாலும் அன்னை இல்லம் என்றால் அன்னை ராஜாமணி பெயர் கூறும் அவர் தம் அருந்தவ புதல்வன் சிவாஜி மாளிகை தான் நினைவுக்கு வரும்.அன்னை இல்லம் என்ற பெயர் கொண்ட அந்த மாளிகையில் நடிகர்திலகத்தின் படப்பிடிப்புகள் பல நடந்துள்ளன.அவை என்னென்ன?
1....19 .10 .1960 இல் வெளியான நடிகர் திலகத்தின் 64 வது திரைப்படம் ஆன பாவை விளக்கு என்ற திரைப்படம் தான் முதன்முதலாக அன்னை இல்லத்தில் படம் பிடிக்கப்பட்டது .இந்தப் படத்தின் முதல் காட்சியே அந்த அன்னை இல்லத்தில் தான் தொடங்கும். இந்த படத்தின் கதை அகிலன் எழுதிய பாவை விளக்கு நாவலை தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் முதல் காட்சியானது நடிகர் திலகம் அந்தப் பாவை விளக்கு நாவலை பற்றி விவரிப்பதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்தக் காட்சியில் நண்பர்களாக வி கே ராமசாமி பாலாஜி அசோகன் பிரேம் நசீர் ஆகியோர் இருப்பார்கள் .ஒரு படத்தின் கதையைப் பற்றி அந்தப் படத்தின் கதாநாயகன் ஆரம்பத்தில் பேசுவதாக அமைக்கப்பட்ட தமிழ் சினிமா காட்சி இதுதான். அன்னை இல்லத்தில் முன்புறத்தில் புல்வெளியில் உட்கார்ந்து நண்பர்கள் பேசிக் கொள்வதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த காட்சி .இதற்கு முன் வெளிவந்த எந்த ஒரு தமிழ்திரைப்படத்திலும் எந்த ஒரு கதாநாயகனின் வீட்டையும் படம் பிடித்து இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் முதல் அன்னை இல்ல காட்சி என்ற சிறப்பை பெற்றது பாவை விளக்கு.

2.பாசமலர்

27.5.61 ல் வெளியான பாசமலர் திரைக் காவியம் அன்னை இல்லத்தில் படம் பிடிக்கப்பட்ட அடுத்த திரைப்படம் ஆகும்.
அன்னை இல்லத்தில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் பல இருந்தாலும் உதாரணத்திற்கு ஒன்று.சிவாஜியவர்கள் தன் சகோதரியான சாவித்திரிக்கு சொத்தையும் ,வீட்டையும் கொடுத்து விட்டு பின் பல காலம் கழித்து சாவித்திரியை பார்க்க அந்த வீட்டுக்கு வருவது போல ஒரு காட்சி.இந்த காட்சியில் ஏழ்மை நிலையில் வரும் சிவாஜியை படத்தில் வரும் P.S.ஞானம் வீட்டிற்குள் வர விடாமல் வெளியே அனுப்பி விடும் காட்சி. கந்தல் உடையில் நொந்த நிலையில் தன் வீட்டை தானே திரும்பி பார்ப்பது போல் இந்த காட்சி இருக்கும் .சொந்த வீட்டின் முன்புதான் இப்படி ஒரு காட்சியில் நடித்தார் அந்த உயர்தர கதாநாயகன். இப்படி எல்லாம் நடிக்க யார் இருந்தார்கள்? இருக்கிறார்கள்? 

3.பந்த பாசம்.வெளியான தேதி
27 .10. 1962 
இந்த படத்தின் ஆரம்பமே அன்னைஇல்லம் தான் காட்டப்படும் .படத்தின் டைட்டில் கார்டு துவங்கும் போது  முதலில் சாந்தி பிலிம்ஸ் என்றும் பின்னால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றும் இரு பெயர்களுக்கு பின்னால் அன்னை இல்லத்தின் பின்னணி புகைப்படத்தை காட்டி விட்டு அப்படியே கேமரா வீதிகளில் இறங்கி பயணிப்பது போல் படம் ஆக்கப்பட்டு இருக்கும்.

4.அன்னை இல்லத்தில் அடுத்து படம் பிடிக்கப்பட்ட படம் பார் மகளே பார். வெளியான தேதி 12 7 63.
படத்தின் பல காட்சிகள் அன்னைஇல்லத்தில் படமாக்கப்பட்டு இருக்கும் .படத்தின் டைட்டில் கார்டு முடிந்தவுடன் அன்னைஇல்லத்தில் கார் வந்து நிற்பது போல முதல் காட்சி இருக்கும்.படத்தில் சிவாஜிக்கு அறிமுகம் ஆகும் சோ பற்றிய காட்சியும் அன்னை இல்லத்தின் வாசலில் தான் படமாக்கப்பட்டு இருக்கும். 
முதல் படமான பாவை விளக்கு தவிர அடுத்த மூன்று படங்களும் 100 நாட்கள் ஓடி ஹட்ரிக் வெற்றி அடைந்தவை .

5.அடுத்து கலாட்டா கல்யாணம் வெளியான தேதி 12 4 68.
இப்படத்தில் பல காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு ஒன்று. படத்தில் அன்னை இல்லத்தின் முன்பு செந்தாமரை பேப்பர் படித்துக் கொண்டிருப்பார் .சிவாஜி நாகேஷ் அவரைச் சென்று பார்ப்பது போல காட்சி இருக்கும் .காட்சியின் முடிவில் சிவாஜி நாகேஷை செந்தாமரை அடிப்பது போன்று காட்சி இருக்கும் .எந்தவித கலாட்டாவும் இல்லாமல் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படம் கலாட்டா கல்யாணம். 

6.திருடன்.
வெளியான தேதி 10 10 69.
இந்த படத்தில் ஒரு காட்சியில் அன்னை இல்லத்தின்  போர்டிகோவில் கார் வந்து நிற்கும். அந்த கார் டிரைவராக நடித்திருப்பார் நடிகர் திலகம். இந்த காட்சியில் அந்த வீட்டின் முதலாளி சிவாஜியை திருடன் என்று குறை சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும் .
இது சினிமா படமாக இருந்தாலும் 
சொந்த வீட்டிலேயே திருடன் என்று காட்சி சித்தரிக்கப்பட்டு இருப்பது நடிகர் திலகம் நடிப்பின் மீது கொண்ட அர்ப்பணிப்பு உணர்வையே காட்டுகின்றது. 

7.கௌரவம். 
வெளியான தேதி 25 10 73 .
படத்தின் ஆரம்பக் காட்சியில் நடிகர்திலகம் கோர்ட்டில் இருந்து வெளியே வருவது போலவும் பின் காரில் அமர்ந்து கார் அன்னைஇல்லத்துக்குள் நுழைவது போல காட்சி படமாக்கப்பட்டு இருக்கும் .
இந்த காட்சிகளில் நடிகர்திலகத்தின் முகம் காட்டப்பட மாட்டாது .அவருடைய கால்கள் மட்டுமே காண்பிக்கப்படும் .

8..தங்கப்பதக்கம்.
வெளியான தேதி 1 .6. 1974. 
அன்னை இல்லத்தில் படம் பிடிக்கப்பட்ட காட்சி என்னவென்றால் குழந்தையை கடத்தியவன் அந்த வீட்டின் முதலாளிக்கு போன் செய்து மிரட்டல் விடுக்கும் காட்சி. அந்த முதலாளியின் வீடாக காண்பிக்கப்படுவது அன்னை இல்லம். வெள்ளி விழா ஓடி வசூலில்  சக்கை  போடு போட்ட படம் தங்கப்பதக்கம் .

9.அண்ணன் ஒரு கோயில் வெளியான தேதி 10 11 77
அன்னை இல்லத்தை இன்னும் பிரபலமாக்கியது அண்ணன் ஒரு கோவில் .இந்தப் படத்தில் பல காட்சிகள் அன்னை இல்லத்தில் படம்பிடிக்கப்பட்டவை ஆகும். பெரும்பாலான பொது மக்களுக்கும் அன்னைஇல்லம் தெரிய ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்து தான் .
10.திரிசூலம்..
 வெளியான தேதி 27 1 1979. 
இந்த படத்தின் சிறப்பு எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அது சிவாஜியின் 200 வது படம். வெள்ளி விழா ஓடி மாபெரும் வசூல் சாதனை செய்த படம்.
நடிகர் திலகம் ஆரம்பமாகும் முதல் காட்சி அன்னை இல்லத்தில் தான் படம் பிடிக்கப்பட்டு இருக்கும்.

11.ரத்தபாசம்.
வெளியான தேதி 14.6.80.
சிவாஜி புரொடக்ஷன்ஸ்  தயாரித்த இந்தப் படத்தில் நடிகர் திலகம் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சி அன்னை இல்லத்தில் தான் படமாக்கப்பட்டு இருக்கும் .போலீஸ் உடையில் மிடுக்கான தோரணையில் கம்பீரமான  நடையுடன் நடிகர் திலகம் நடந்து வருவது போல காட்சி இருக்கும்.
சிவாஜி புரோடொக்ஷன்ஸ் தயாரித்து இளையதிலகம் கமல் ஹாசன் நடித்து வெளியான வெற்றிவிழா படமும் அன்னை இல்லத்தில் படமாக்கப்பட்டிருக்கும்.இந்த படத்தில் இந்தி வில்லன் நடிகரான சலீம் கௌஸ் அறிமுகம் ஆகும் காட்சி அன்னை இல்லத்தில் படமாக்கப்பட்டிருக்கும்.
இளைதிலகத்தின் 100 வது படமான ராஜகுமாரன் அறிமுக காட்சியில் நடிகர்திலகம் நடந்து வந்து இளையதிலகத்துக்கு ஆசி வழங்குவது போல காட்சியும் அன்னை இல்லம் தான்.
இளையதிலகம் பிரபு விஜய் நடித்து வெளியான தெறி படத்தில் வில்லன் நடிகராக வரும் மகேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அன்னை இல்லத்தில் 
படமாக்கப்பட்டிருக்கும்.
என் நினைவில் உள்ளதை இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன். ஒன்று இரண்டு படங்கள் விடுபட்டு இருக்கலாம். உங்களுக்கு தெரிந்தால் கூறவும் ..

நன்றி செந்தில்வேல் சிவராஜ்

Leave a Reply