• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா

சினிமா

உலகளவில் அழகிகளை தேர்வு செய்ய பல்வேறு போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கபோகிறார்.

அப்படி ஒவ்வொரு நாட்டு அழகிகளையும் கொண்டு உலக அழகி போட்டி நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் உலக அழகி பட்டம் வழங்கப்படும். இதற்கிடையே இந்த பிரபஞ்சத்திலேயே அழகி என்ற பட்டத்தை வெல்லும் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் பல முக்கிய நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டு அவர்கள் திறமைகளை காட்சிப்படுத்துவர். உலகளவில் மிக செல்வாக்கான இந்த பட்டத்தை எந்த நாட்டு அழகி கைப்பற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி கலந்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பெண்களுக்கு என்று தனி கட்டுபாடுகளை கொண்டுள்ளது. தங்களுக்கு என்று தனித்துவமான கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே அங்கு ஆட்சி முறையும் அமைந்துள்ளது.

சமீப காலமாக இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கான உரிமைகளில் தளர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை, ஆண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி போன்றவை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா சார்பாக 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) கலந்துகொள்கிறார்.

தலைநகர் ரியாத்தில் பிறந்த ரூமி, மிஸ் சவுதி அரேபியா பட்டம் வெற்றவர். அதுமட்டுமில்லாமல் மிஸ் மிடில் ஈஸ்ட், மிஸ் அரபு உலக அமைதி 2021 மற்றும் மிஸ் உமன் ஆகிய பட்டங்களையும் கொண்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் மிஸ் மற்றும் மிஸ்சஸ் கோபல் ஏசியன் அழகி போட்டி (Miss and Mrs Global Asian), மிஸ் ஏசியா இண்டர்நேஷனல் அழகி போட்டி (Miss Asia international) ஆகியவற்றில் சவுதி அரேபியா சார்பில் கலந்துகொண்டார்.
 

Leave a Reply