• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். 

சினிமா

ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். கதைகளை தேர்ந்தெடுப்பது துவங்கி பாடல் காட்சிகள், நடனம் ஆடுவது வரை ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனித்தனி பாணி இருக்கும். விஜய் நடனமாடுவது போல மற்ற நடிகர்கள் ஆடமாட்டார்கள். பிரபுதேவாவை போல அவர் மட்டுமே ஆட முடியும்.

நடன இயக்குனர்களும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்களுக்கு எது செட் ஆகுமோ அப்படித்தான் நடன அசைவுகளை அமைப்பார்கள். ரஜினிக்கு அமைக்கும் நடன அசைவுகள் கமலுக்கு செட் ஆகாது. அஜித்துக்கு வைக்கும் அசைவுகள் விஜய்க்கு செட் ஆகாது. இது நடன இயக்குனர்களுக்கு நன்றாகவே தெரியும்.

விஜய், சிம்பு போல நன்றாக நடனமாட தெரிந்தால் எப்படிப்பட்ட நடன அசைவுகளையும் நடன இயக்குனர்கள் தயங்காமல் வைப்பார்கள். ஏனெனில் அவர்கள் அதை கச்சிதமாக ஆடிவிடுவார்கள். 60களிலிலும் இப்படித்தான் இருந்தது. எம்.ஜி.ஆருக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கும். அதேபோல்தான் சிவாஜிக்கு ஒரு தனி நடன அசைவுகள் இருக்கும்.

60களில் பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் டி.ஆர்.ராமன்னா. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான கூண்டுக்கிளி படத்தை இயக்கியவரும் இவர்தான். இவர் நடிகை ஈ.வி.சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதலில் சவுண்ட் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த இவர் மனைவியின் அறிவுரையை கேட்டு இயக்குனராக மாறி பல ஹிட் படங்களை கொடுத்தார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான குலோபகாவலி படத்தை இயக்கியவரும் இவர்தான். இவரின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து 1963ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் பெரிய இடத்து பெண். இந்த படத்தில் ‘அன்று வந்ததும் அதே நிலா’ என்கிற பாடலுக்கு எம்.ஜி.ஆர் சூட், கோட் எல்லாம் அணிந்து அசத்தலாக நடனமாடியிருப்பார்.

நான் இதுவரை சூட், கோட் அணிந்து பாடலில் நடித்தது இல்லை. என் ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இது எனக்கு செட் ஆகாது என எம்.ஜி.ஆர் சொல்லி இருக்கிறார். ஆனால், டி.ஆர். ராமன்னா அவரை சமாதானம் செய்து அப்பாடலுக்கு நடனமாட வைத்தார். ஆனால், அந்த பாடலுக்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அதன்பின் எம்.ஜி.ஆர் நடிக்கும் எல்லா படங்களிலும் கோட், சூட் அணிந்து ஒரு பாடலில் எம்.ஜி.ஆர் நடனமாடினார். நீங்கள் துவங்கி வைத்தீர்கள். இப்போது எல்லா இயக்குனர்களும் என்னை அப்படி ஒரு பாடலுக்கு நடனமாட சொல்லுகிறார்கள்’ டி.ஆர்.ராமன்னாவிடம் சொல்லி சிரித்தாராம் எம்.ஜி.ஆர்.
 

Leave a Reply