• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கை

நாட்டின் பல பாகங்களில் வெப்பநிலை சுட்டெண் இன்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி மேல் சப்ரகமுவ வடமேல் வட மத்திய மற்றும் தென் மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வெப்பநிலையானது மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை விடவும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் சப்ரகமுவ வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்தளவில் மழைபெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் காற்றின்வேகமானது மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply