• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசன் அட்வைஸ், கடைசி வரை கேட்காத சாவித்திரி : நடந்தது இதுதான்!

சினிமா

பல தடைகளை கடந்து வெளியாக ரத்த திலகம் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், சாவித்ரி – கண்ணதாசன் இடையேயான பாசமும் அதிகாரித்தது.

1962-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்திய அரசு மீதும், இந்திய ராணுவம் மீதும் மக்களுக்கு கடும் அதிருப்தி இருந்தது. அந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு தேசப்பற்றை ஊட்டும் வகையில் ஒரு படத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று விரும்பிய கவிஞர் கண்ணதாசன் ரத்த திலகம் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

பஞ்சு அருணாச்சலம் தயாரித்த இந்த படத்தில், சிவாஜி கணேசன் சாவித்ரி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சாவித்ரி – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு வழியாக இந்த சரியாக, அடுத்து சிவாஜி கணேசன் – சாவித்ரி இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையும் சரியாக படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது கண்ணதாசன் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படத்தில் தான் கண்ணதாசன் ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்ற பாடலில் தோன்றியிருந்தார். போர் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், எம்.ஆர்,ராதா நடித்திருந்ததும், அவரது காட்சிகள் கதையில் இருந்து விலகி செல்வதால், அவரின் முழு காட்சிகளையும் படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். அதேபோல் நாகேஷ் – மனோராமா இணைந்து நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தளத்தில் வெடிகுண்டு வெடித்து 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட சில நாட்கள் இடைவெளிக்கு பின் தொடங்கியுள்ளது. இப்படி பல தடைகளை கடந்து வெளியாக ரத்த திலகம் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், சாவித்ரி – கண்ணதாசன் இடையேயான பாசமும் அதிகாரித்தது. இதன் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கூட கண்ணதாசனிடம் சொல்லும் நிலையில் இருந்துள்ளார் சாவித்ரி.

அந்த வகையில் ஒரு கட்டத்தில், தனக்கு சினிமாவில் வாய்ப்பு குறையவே, சொந்தப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்த சாவித்ரி கண்ணதாசனிடம் கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், வேண்டாம் சாவித்ரி, நானே சொந்த படம் எடுத்து பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன். நான் படம் எடுக்கும்போது என்னுடன் இருந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. மற்றவர்களை நம்பி எதையும் செய்யாதே, என்று அட்வைஸ் செய்துள்ளார். ஆனாலும், கண்ணதாசனின் பேச்சை கேட்காத சாவித்ரி, 1971-ம் ஆண்டு பிராப்தம் என்ற படத்தை தயாரித்து இயக்கி நாயகியாக நடித்தார்.

சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த இந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், சரோஜா தேவியை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியது. மேலும் இந்த படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த கடைசி படமாகும்.
 

Leave a Reply