• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா பேச்சை கேட்காத பாடகி... திட்டமிட்டு ஓரம் கட்டப்பட்டாரா ஜென்சி?

சினிமா

பாரதிராஜாவின், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, உள்ளிட்ட படங்களில் பாடி, பாரதிராஜாவின் மனதை வென்றிருந்தார்.

தென்னந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்வர் தான் ஜென்சி. கேரளாவை சேர்ந்த இவர், மலையாள படங்களில் பாடகியாக அறிமுகமாகி பலரின் இதயங்களை கவர்ந்தவர். மேலும் 70 காலக்கட்டங்களில் பாடகர் யேசுதாஸூடன் இணைந்து பல பாடல்களை பாடியிருந்த ஜென்சியின் குரல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், அவருக்கு தமிழில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று யேசுதாஸ் நினைத்துள்ளார்.

அப்போது தமிழ் சினிமாவில் வளரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த இளையராஜாவிடம் ஜென்சியை பற்றி கூறிய யேசுதாஸ், வாயஸ் டெஸ்ட் எடுங்கள் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். திறமை இல்லாதவர்களுக்கு யேசுதாஸ் சிபாரிசு செய்ய மாட்டார் என்று தெரிந்துகொண்ட இளையராஜா மறுநாள் ஜென்சியை வாய்ஸ் டெஸ்டுக்கு அழைத்துள்ளார்.

இளையராஜாவின் அழைப்பை ஏற்று தனது தந்தையுடன் கொச்சியில் இருந்து சென்னை வந்த ஜென்சி, அந்த வாய்ஸ் டெஸ்டில் இளையராஜாவின் மனதை கவர்ந்தார். இதன் காரணமாக வாய்ஸ் டெஸ்ட்டுக்காக வந்த ஜென்சிக்கு அன்று மாலையே ஒரு படத்தில் பாடல் பாடும் வாய்ப்பினை வழங்கியுள்ளார் இளையராஜா. 1978-ம் ஆண்டு வெளியான திரிபுற சுந்தரி என்ற படத்தில் எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து முள்ளும் மலரும், வட்டத்துக்குள் சதுரம், சொன்னது நீதானா பிரியா உள்ளிட்ட படங்களில் பாடிய ஜென்சி, 1978-ம் ஆண்டு 5 படங்களில் பாடல்கள் பாடியிருந்தார். இதில் குறிப்பாக பிரியா படத்தில் இடம்பெற்ற ‘’என் உயிர் நீதானே’’ பாடலை தான் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான காரணமாக இருந்த யேசுதாஸூடன் இணைந்து படியிருந்தார்.

பாரதிராஜாவின், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, உள்ளிட்ட படங்களில் பாடி, பாரதிராஜாவின் மனதை வென்றிருந்தார். பாரதிராஜாவுக்கு பிடித்தமான பாடகிகளில் ஒருவராக இந்த ஜென்சி, தனது படங்களில் தொடர்ந்து பாட வேண்டும் என்று பாரதிராஜா விரும்பியுள்ளார். குறுகியாக காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தயில் பிரபலமான ஜென்சி, சென்னையில் தங்கினால், அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று இளையராஜா அவரிடம் கூறியுள்ளார். ஆனாலும் அவரது அப்பா, சென்னை வேண்டாம் என்று கூறி தடுத்துள்ளார்.

இளையராஜா அழைக்கும்போது தனது அப்பாவுடன் டிரெய்னில் சென்னை வந்து பாடல் பாடிவிட்டு, மீண்டும் கொச்சி திரும்பிவிடுவார். இந்த காலக்கட்டத்தில் எஸ்.ஜானகி, பி.சுசிலா இருவரும் முன்னணி பாடகிகளாக இருந்ததால், இவர்களை மீறி எப்படி நமக்கு வாய்ப்பு கிடைக்க போகிறது என்று நினைத்த ஜென்சி, சென்னையில் தங்குவதை விரும்பாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், ஜானசி, சுசில இருவரையும் விட பெரிய பாடகியாக வர ஜென்சிக்கு வாய்ப்பு இருந்தது.

இளையராஜா சொன்னதை கேட்டு, அவர் சென்னையில் குடியேறி இருந்தால், நிச்சயம் பெரிய பாடகியாக உருவாகி இருக்கலாம். 1981-ம் ஆண்டு அவர் இனிமேல் சினிமாவில் பாடப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாத நிலையில், அவர் திட்டமிட்டே ஓரம்கட்டப்பட்டிரு வாய்ப்பு உள்ளது என்று இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

கடைசியாக 1982-ம் ஆண்டு வெளியான எச்சில் இரவுகள் என்ற படத்தில் பாடல் பாடியிருந்த ஜென்சி, மலையாளத்தில் 1989-ம் ஆண்டு அவள் என்ற படத்தில் பாடியிருந்தார். மேலும் ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக சேர்ந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
 

Leave a Reply