• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவின் எதிர்ப்பை மீறி மாலைதீவில் நங்கூரமிட்டது சீனக் கப்பல்

இலங்கை

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சீனா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதுடன், தனது கடும் கண்டனத்தினையும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராந்திய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சீனக் கப்பல் மாலைத்தீவு சென்றுள்ளதுடன், மாலைத்தீவு இந்தியாவுடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் மாலேக்கு அருகிலுள்ள திலாஃபுஷி தொழில்துறை துறைமுகத்தில் சீனாவின் Xiang Yang Hong 3 ஆராய்ச்சிக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்குத் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த சீனக் கப்பல் வஜியம் செய்துள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த சீனக்கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் எதிர்ப்பினையடுத்து குறித்த ஆய்வுக் கப்பலிற்கு இலங்கை அனுமதி மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply