• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுமார் 34 வருடங்களின் பின்னர் வழிபாட்டுக்காக செல்லும் வலிவடக்கு மக்கள் 

இலங்கை

சுமார் 34 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி ஆலைய வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.

இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து வருகை தரும் பக்தர்கள் இராணுவத்தின் பேரூந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள அதேநேரம் பூசைப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பாக பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிலையில் கடந்த 14ஆம் திகதி யாழ் மாவட்ட செயலர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், மாவட்ட செயலக அதிகாரிகள், தெல்லிப்பழை பிரதேச செயலர் , யாழ் மாவட்ட இராணுவ தளபதி ஆகியோருக்கிடையில் பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் தலைமையகத்தில் கூட்டம் இடம்பெற்றது.

மேலும் வழிபாட்டு தலங்களை புனர்நிர்மாணம் அல்லது புனரமைப்பு பணிகள் செய்வதற்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை என இராணுவம் குறிப்பிட்டுள்ள போதிலும் ஆலயத்தினர் விரும்பினால் முறையான கோரிக்கையினை மாவட்ட செயலகத்திடம் முன் வைப்பதன் மூலம் இராணவத்தினர் மூலம் ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்யமுடியும் என யாழ் மாவட்ட செயலர் அம்பலவானர் சிவபாலசுந்தரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply