• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மூன்றாம் பிறை 42 ஆண்டுகள்...

சினிமா

பாலு மகேந்திரா கமல் முதன் முறையாக அவரின் இயக்கத்தில் கோகிலா கன்னட படத்தில் இணைந்திருந்தாலும் இசைஞானியுடன் மூவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் மூன்றாம் பிறை. சிறந்த நடிகருக்காக கமலுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக பாலு மகேந்திராவுக்கும் தேசிய விருது வாங்கி தந்த படம்... அன்றைய கால கட்டங்களில் ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து பல கண்டனங்கள் வந்தது குறிப்பிடதக்கது.

கமல் ஸ்ரீதேவி என்ற கலைஞர்களை சீனுவாகவும் விஜியாகவும் மனதில் இன்று வரை நினைத்து கொண்டாடும் கதாபாத்திரங்கள்... பூர்ணம் விஸ்வ நாதன் என்ற நடிகரை எல்லாம் கிளுகிளுப்பான காதல் காட்சியில் நடிக்க வைத்த இயக்குனர்... காட்சி ஆரம்பிக்கும் போது பின்னணியில் தவளையின் தவிப்பை கொடுத்து கோரஸ் வயலின்களின் ஆர்ப்பரிப்பை காட்சியுடன் சங்கம படுத்தி காமம் முடித்து சில்க்கின் காதல் தேடலை தனி இசையா பின்னணியில் கொடுத்து அந்த காட்சியை அசத்தி இருப்பாரு இசைஞானி...

காபி ராகத்தில் அமையப் பெற்ற கண்ணே கலைமானே பாடலானது சிச்சுவேசன் சொல்லப்பட கண்ணதாசனால் 2 நிமிடத்தில் அவரின் மனைவியின் நினைவாக எழுதி முடிக்கப்பட்டதாம்... இந்த பாடலே கண்ண தாசன் அவர்களின் திரையுலகின் கடைசி பாடலாகவும் அமைந்தது. கண்ணே கலைமானே, பூங்காற்று, நரிக்கதை பாடல், பொன்மேனி என்று வெவ்வேறு சுவைகளில் பாடல்கள் இருந்தாலும் வானெங்கும் தங்க வின்மீண்கள் பாடலில் இசைஞானியின் இசை மகத்துவம் வேறு லெவலில் அரங்கேற்றபட்டது என்றே சொல்லலாம்...

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கொடுக்கலைன்னு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் படத்தின் கடைசி 10 நிமிட காட்சியில் கமல் காண்போர் அனைவரின் கண்களையும் கலங்கடுத்தி விட்ட சம்பவம் அவருக்கு கொடுத்த தேசிய விருதுக்கான காரணத்தை நியாயப் படுத்தி விடுகிறது... 

ஆட்ரா ராமா ஆட்ரா ராமா... நீ ஏன் அழுதே அப்படீன்னு கமலை பார்த்து ஸ்ரீதேவி கேட்கும் போது “நான் புலி சிங்கம் மயில் குட்டி அது மாதிரி அழுதேன் நீ எதுக்கு அழுகுறே” என்றவுடன் “அப்ப சரி” என்று ஸ்ரீதேவி சொல்லீட்டு மூக்கை சிலிர்த்து நாக்கை மேலே துருத்தி மூக்கில் வலியும் நீரை துடைக்க முயற்சிப்பது அவரின் நடிப்புக்கும் தேசிய விருது கொடுத்து இருக்கலாம் தான் என்று ஏங்க வைக்கிறது...

மூன்றாம் பிறை 42 ஆண்டுகள்...
பாலுமகேந்திரா கமல் ஸ்ரீதேவி இசைஞானி 
 

Leave a Reply