• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைனுக்கு தொடர்ந்தும் உதவும் கனடா

கனடிய அரசாங்கம், உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

போர் விமானங்களை இயக்குவதற்கு தேவையான பயிற்சிகளை கனடா வழங்க உள்ளது.

உக்ரைன் விமானிகளுக்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிலயர் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அறுபது மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோர்வே, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கியுள்ளன.

இராணுவ தளவாடக் கொள்வனவு மற்றும் விமான உதிரிப் பாகக் கொள்வனவு போன்றவற்றுக்காக இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. உக்ரைனுக்கு கனடா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் என அறிவித்துள்ளது. 
 

Leave a Reply