• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல நடிகர்களுக்கு டப்பிங் பேசினாலும் சியானின் ஃபேவரைட் அந்த படம்தானாம்.. அது செம படமாச்சே!..

சினிமா

சேது திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகி இப்போது தங்கலான் வரை பல திரைப்படங்களிலும் வித்தியாசமான வேடங்களில் நடித்த நடிகர் விக்ரமைத்தான் பலருக்கும் தெரியும். ஹீரோவாக மாறுவதற்கு முன் அவர் பல வருடங்கள் திரையுலகில் போராடிய கதையை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம்.

நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நடிக்க முயன்றார். ஆனால், வாய்ப்புகள் இல்லை. மீரா உள்ளிட்ட அவர் நடித்த சில படங்களோ ஓடவில்லை. எனவே, மலையாள சினிமா பக்கம் சென்று சுரேஷ் கோபி போன்ற நடிகர்களுக்கு தம்பியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

90களில் விக்ரமின் குரலை மட்டுமே சில இயக்குனர்கள் பயன்படுத்திகொண்டனர். துவக்கத்தில் நடிகர் அப்பாஸுக்கு அவர் நடிக்கும் படங்களில் குரல் கொடுத்தவர் விக்ரம்தான். ஷங்கர் இயக்கத்தில் உருவான காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு குரல் கொடுத்தவர் விக்ரம்தான். டப்பிங் செய்யும்போது படத்தை பார்த்த விக்ரம் ‘என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுங்கள்’ என ஷங்கரிடம் வாய்ப்பே கேட்டார்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு டப்பிங் கலைஞராகத்தான் விக்ரமை திரையுலகில் பலருக்கும் தெரியும். ஒரு விபத்தில் சிக்கி 3 வருடங்கள் படுக்கையில் இருந்தவர் இவர். பாலா எனும் இயக்குனர் கிடைக்க சேது படம் விக்ரமின் வாழ்க்கையை மாற்றியது. அதன்பின் படிப்படியாக நடிக்க துவங்கி இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

சிறுவயதில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது ஆங்கில நாடகங்களில் விக்ரம் நடிப்பாராம். அப்படித்தான் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது. அதேபோல், கல்லூரியில் படிக்கும்மோது மாடலாகவும் இருந்துள்ளார். என் காதல் கண்மணி, தந்து விட்டேன் என்னை என சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் அவருக்கு வெற்றியாக அமையவில்லை. அதன்பின்னரே அவருக்கு சேது கிடைத்தது.

விக்ரம் பல திரைப்படங்களில் பல நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும் ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ படத்தில் இளவயது காந்திக்கு குரல் கொடுத்தது தனக்கு மிகவும் பிடித்த ஒன்று எனவும், தனது குரலை மாற்றி அதில் பேசியிருந்ததாகவும் விக்ரம் கூறியிருந்தார்.
 

Leave a Reply