• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷூட்டிங் போய் தங்க இடமில்லாமல் மொட்டை மாடியில் தூங்கிய ரஜினி!.. நடந்தது இதுதான்!

சினிமா

ரஜினி ஒன்றும் பிறக்கும்போதே பணக்காரர் இல்லை. பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தார். கிடைக்கும் சம்பளத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக செலவு செய்து வந்தவர். ஒரு நாடகத்தில் அவர் நடித்ததை பார்த்த அவரின் நண்பர் ‘உனக்குள் ஒரு ஸ்டைல் இருக்கு. நீ சினிமாவுக்கு போய் முயற்சி செய்’ என சொல்ல அப்படி சினிமாவுக்கு வந்தவர்தான் ரஜினி.

சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்தபோது ஒரு சிறிய அறையில் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் வாய்ப்பு கிடைக்க இப்படித்தான் டேக் ஆப் ஆனார் ரஜினி. பொதுவாக சினிமாவில் பலரும் மேலே வந்தபின் பழசை மறந்துவிடுவார்கள்.

ஆனால், ரஜினி அப்படி இல்லை. எப்போதும் எளிமையாகவே இருக்கிறார். கண்ணாடி முன் அவர் தினமும் பார்ப்பது சிவாஜி ராவைத்தானே தவிர ரஜினியை இல்லை. இதை அவரே சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் மற்ற நடிகர்களை போல கேரவானில் அதிக நேரம் இருக்கமாட்டார்.

ஒரு மரத்தடியில் சேர் போட்டு அமர்ந்துவிடுவார். அவர் சாப்பிடும் உணவு கூட மிகவும் எளிமையானவைதான். ரஜினி எளிமையானவர் என்பதற்கு திரையுலகில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதில் ஒன்றைத்தான் இங்கே பாரக்கபோகிறோம். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி.

இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியை தாடா அருகே எடுக்க திட்டமிட்டார் எஸ்.பி.முத்துராமன். இதற்காக நடன கலைஞர்கள், முத்துராமன், ரஜினி ஆகியோர் அங்கு சென்றனர். ஒரேநாளில் அந்த காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தார் முத்துராமன். ஆனால், சில காரணங்களால் அப்படி எடுக்க முடியவில்லை.. இதற்காக மீண்டும் சென்னைக்கு போய் மீண்டும் நாளைக்கு திரும்பி வர முத்துராமனுக்கு விருப்பமில்லை.

எனவே, அருகில் உள்ள டீக்கடையில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு, ஒருவீட்டின் மொட்டை மாடியில் எல்லோரும் படுத்துவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு போய்விடுவோம் என நினைத்தார். ஆனால், ரஜினியை அப்படி படுக்க வைக்க முடியாது என்பதால் ‘நீங்கள் மட்டும் சென்னை போய்விட்டு நாளைக்கு வாங்க’ என சொல்ல ரஜினி சென்னை போக மறுத்துவிட்டாராம்.

நான் மட்டும் என்ன ஸ்பெஷல். நானும் உங்களுடன்யே இருக்கிறேன். அந்த மொட்டை மாடியில் மூலையில் ஒரு இடம் கொடுத்தால் போதும் என சொல்லிவிட்டு அங்கேயே தூங்கி எழுந்து அடுத்தநாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பி இருக்கிறார்கள். திரையுலகில் ரஜினியை போன்ற நடிகர்கள் மிகவும் அரிது என்றுதான் சொல்ல வேண்டும்.

Leave a Reply