• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமானச் சேவை!

இலங்கை

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பணியாளர்களைத் திருப்பி அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தைத் தடுப்பதே இவ்  ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply