• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளியானது அஜித் படத்தின் மாஸ் அப்டேட்

சினிமா

அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தை முடித்தபின் அஜித் நடிக்கவுள்ள படம் தான் ஏகே 63. இப்படத்தை இளம் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார்.
 
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கப்போகிறாராம். கிரீடம் படத்திற்கு பின் அஜித்தின் 63வது படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏகே 63 படத்தின் பூஜை இன்று சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் அவருடைய டீம் கலந்துகொண்டுள்ளனர் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்தில் ஆரம்பம் ஆகும் என தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகை அன்று விடாமுயற்சி படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை என சோகத்துடன் இருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏகே 63 படத்தின் அப்டேட் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 
 

Leave a Reply