• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுந்தரக் குரல் சொந்தக்காரி சுனந்தா

சினிமா

திரையுலகை எடுத்துக் கொண்டா ல் திறமை இருந்தால் மட்டுமல்ல அதிஷ்டமும் கூடி வந்தால் தான் வாய்ப்புக்கள் கிட்டும் என்பதற்கு திரையிசைப்பாடகர்கள் கூட விதிவிலக்கல்ல. அப்படி ஒரு எடுத்துக்காட்டுத் தான் பாடகி சுனந்தா.

புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் காதல் மயக்கம் பாடவைத்து தன் குரலால் மயக்கியவர். தொடர்ந்து அத்தி பூத்தாற்போலத்தான் சுனந்தாவுக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கின்றது. திரையிசையை எடுத்துக் கொண்டால் என்னதான் சிறப்பான குரல்வளம் இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் பாங்கும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இது காதல் ரசம் கொட்டும் பாடலில் இருந்து, வீரஞ்செறிந்த மிடுக்கான பெண் குரலாக வளைந்தும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எஸ்.ஜானகியின் விதவிதமான பரிமாணங்களுக்கு (சித்ரா கூட இந்த வகையில் முயற்சித்திருக்கிறார்)ஈடு கொடுக்கும் வகையில் எண்பதுகளில் பாடகிகள் இல்லையென்றே கூறிவிடலாம். சுனந்தா கூட இந்தப் பட்டியலில் சேர்த்தி. காதலின் ஆத்மார்த்த ராகமாக ஒலிக்கும் அவர் குரலை வேறு எந்த எல்லைக்கும் பயன்படுத்த முடிவதில்லை.
கேரளத்தில் இருந்து வந்த குயில்களில் சுனந்தாவும் சேர்த்தி. இவருக்கு ஈடுகொடுக்கும் அலைவரிசையில் அமைந்த பாடகர் ஜெயச்சந்திரன் அழகாகப் பொருந்தி சிறப்புச் சேர்த்த பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை.

தமிழ் பின்னணிப் பாடலில் இடைவேளைக்கு முன், மலையாள ஆவணப்படம் ஒன்றிற்காக கர்நாடகப் பாடல்கள் மற்றும் ஸ்லோகங்களைப் பாடியுள்ளார். அவரது முதல் திரைப்படப் பாடல் வெற்றி பெற்றது, மேலும் அவர் 1980கள் மற்றும் 1990களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடினார். தனிப்பட்ட காரணங்களால் அவரால் பல ஆண்டுகளாக சுறுசுறுப்பான பின்னணிப் பாடலைத் தொடர முடியவில்லை
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் "செண்பகமே செண்பகமே" என்ற இனிய பாடலை என்னதான் பெரிய பாடகியாக இருந்தாலும் ஆஷா போன்ஸ்லே பாடும் போது தமிழை விட்டு விலகிய ஒரு அன்னியத்தன்மை தெரியும். அதே பாடலை சந்தோஷ மெட்டில் சுனந்தா பாடிய போது ஆஷாவையே ஓரம் கட்டிவிட்டது போன்ற பரிமாணத்தைக் காணலாம். இன்னொரு சிறப்பான உதாரணம், சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வரும் "பூவே செம்பூவெ" இந்தப் பாடலை ஆண்குரலில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் போது அதே அலைவரிசையில் பெண்குரலாக சுனந்தா பாடியதும் கேட்கத் திகட்டாத தேன்மழை. உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் "என்ன சமையலோ" என்ன கலகலப்பான பாடலில் சுனந்தாவின் குரல் வித்தியாசமாக வெளிப்பட் டிருக்கிறது.

தொண்ணூறுகளில் செவ்வந்தி படத்தில் வரும் "செம்மீனே செம்மீனே", உழைப்பாளி படத்தில் வரும் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே", வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் "மன்னவா மன்னவா" பாடல்கள் சுனந்தாவுக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புக்களிலும் சிக்சர் அடித்த பாட்டுக்கள். சுனந்தாவின் குரலை பலசமயம் நினைவு படுத்தும் குரலாக பின்னாளில் அறிமுகமாகி புயல்போல் புரட்டிப் போட்ட சொர்ணலதாவின் குரல் சுனந்தாவிற்கு கிடைத்த மிச்ச சொச்ச பாடும் வாய்ப்புக்களைக் கூடப் பங்கு போட்டு விட்டது போல.

இன்றைய யுகத்து நாயகிகளுக்கும் பொருந்திப் போகக் கூடிய சுந்தரக் குரல் கொண்ட சுனந்தாவின் பாடல்பெட்டகத்தில் இருந்து ஒரு சிலபாடல்களை உங்கள் ரசனைக்கு விருந்தாகப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றே

முதலில் வருவது சுனந்தாவை தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய "காதல் மயக்கம்" ஜோடி கட்டி இணைந்து பாடுவது ஜெயச்சந்திரன்

சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் இருந்து சுனந்தா பாடும் "பூவே செம்பூவே" என்ற இதமான ராகம் இதயத்தில் ஊடுருவ

காதல் பாடல்களில் என் விலக்க முடியாத விருப்பத் தேர்வாக இருக்கும் "பூ முடிச்சு பொட்டு வச்ச வட்ட நிலா" ஜெயச்சந்திரன், சுனந்தா குரல்களில் "எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" படத்தில் இருந்து

இசைஞானி இளையராஜா ஹீரோவாக இருந்த படங்களில் ஒன்றான "எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்தில் இருந்து மனோவுடன் சுந்தரக் குரல் சுனந்தா பாடும் "செண்பகமே செண்பகமே"

எஸ்.பி.பி, சித்ராவோடு சுனந்தா பாடும் வித்தியாசமான பாடல் ரகமான "என்ன சமையலோ", உன்னால் முடியும் தம்பி திரைக்கா க

செவ்வந்தி திரையில் இருந்து கலக்கல் ஜோடி ஜெயச்சந்திரன், சுனந்தா மீண்டும் இணையும் "செம்மீனே செம்மீனே"

குழந்தையை மட்டுமா தாலாட்டியது, இல்லை இல்லை நம் எல்லோரையும் தாலாட்டும் சுனந்தாவின் "மன்னவா மன்னவா" , வால்டர் வெற்றிவேல் தருகிறது.

நிறைவாகவும் "நிறைவாகவும்" ஜெயச்சந்தி ரன், சுனந்தா ஜோடி கட்டும் "ஒரு கோலக்கிளி" பொன் விலங்கு திரைப்படத்துக்காக

தமிழ் பாடல்களின் பட்டியல் ஆண்டுதிரைப்படம்இசை அமைப்பாளர்பாடல்1984புதுமை பென்இளையராஜா"காதல் மயக்கம்"1985சின்ன வீடுஇளையராஜா"வெள்ளை மனம்"1987எங்க ஊரு பாட்டுக்காரன்இளையராஜா"செண்பகமே"1988சொல்ல துடிக்குது மனசுஇளையராஜா"பூவே செம்பூவே"1989என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்இளையராஜா"பூமுடித்து"1993வால்டர் வெற்றிவேல்இளையராஜா"மன்னவா மன்னவா"1993கிழக்கு சீமையிலேஏஆர் ரஹ்மான்"எதுக்கு பொண்டாட்டி"1994செவ்வந்திஇளையராஜா"செம்மீனே செம்மீனே"1994வீட்ல விஷேசங்கஇளையராஜா"பூங்குயில் ரெண்டு"1995காதலன்ஏஆர் ரஹ்மான்"இந்திரையோ இவள் சுந்தரியோ"1996மஹாபிரபுதேவா"சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை"1997சூரியவம்சம்எஸ்.ஏ.ராஜ்குமார்"நட்சத்திர ஜன்னலில்" நன்றி கானா பிரபா மற்றும் விக்கிபீடியா

Leave a Reply