• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் மரபுத்திங்கள் ஆரம்ப விழா

கனடா

TAMIL CANADIAN CENTRE FOR CIVIC ACTION மற்றும்   TAMIL HERITAGE MONTH COUNCI அத்துடன்  திரு நீதன் சண்முகராஜா நண்பர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய 'தமிழ் மரபுத்திங்கள்' ஆரம்ப விழா

கடந்த 06-01-2024 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரில் TAMIL CANADIAN CENTRE FOR CIVIC ACTION மற்றும்   TAMIL HERITAGE MONTH COUNCI அத்துடன்  திரு நீதன் சண்முகராஜா நண்பர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய 'தமிழ் மரபுத்திங்கள்' ஆரம்ப விழா சிறப்பாக நடைபெற்றது.

குயின் பெலஸ் விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில்  பெருந்திரளான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன. அங்கு உரையாற்றி ரொறன்ரோ மாநகரத்தின் மேயர் திருமதி ஒல்வியா சோ அவர்கள் தமிழ் மக்களும் அவர்களின் பிள்ளைகளும் ரொறன்ரோ மாநகரில் பல அற்புதங்களை நிலைநாட்டிவருகின்றார்கள் என்றும் ஒரு அறிவுள்ள சமூகமான கனடியத் தமிழர்கள் திகழ்கின்றார்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.

திரு நீதன் சண்முகராஜா தலைமையுரையாற்றினார்.

'தமிழ் மரபுத்திங்கள்' ஆரம்ப விழாவையொட்டிய பதாகையின் பிரதிகள் அங்கு வருகை தந்த விருந்தினர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் வழங்கப்பெற்றன.

-செய்தியும் படங்களும்: சத்தியன்- கனடா உதயன்  குழுமம்

Leave a Reply