• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் தமிழ் மரபுத்திங்கள் ஆரம்ப நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கனடா

ஜனவரி 06/2024 இல் தமிழ் மரபுத்திங்கள் செயலவை 150 அமைப்புகளுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து, தமிழ் மரபுத் திங்கள் செயலவை , Toronto கல்விச்சவை மேலாளர் மதிப்புக்கிரிய நீதன் சண் தலைமையில் சிறப்பாகவும், கோலாகலமாகவும்
தமிழ் மரபுத்திங்கள் ஆரம்ப நிகழ்வு
நடந்தேறியது. 15வது ஆண்டு தமிழ் மரபுத் திங்கள்
விழா, தமிழ்ச்சுவை, தமிழரும் உணவும்,
நேற்று இன்று நாளை என்ற கருப் பொருளில் மிகவும் கோலாகலமாக
நடைபெற்றது.

கனேடிய நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும், தை மாதம் தமிழ் மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டது . இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட
பெருமதிப்புக்குரியவர்களான
கனடாப் பாரளுமன்ற உறுப்பினர்கள்,
மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள், Toronto நகரபிதா,
Richmond Hill நகரபிதா, நகரசபை உறப்பினர்கள் ,கல்விச்சபை
உறுப்பினர்கள் MP Paul Chiang,
MP Majid jowhari, MP Salma Zahid
MPP Marit Stiles ( Ontario NDP Leader) MPP Aris Babikian,
MPP Logan Kanapathi, MPP Adil Shamji , Toronto Mayor Olivia Chow,
Richmond Hill Mayor David west,
Councilors Josh Matlow, Jennifer Mckelvie, Parthi Kandavel, Jamal Myers
School Board trustees
Neethan Shan, Anu Sriskandarajah,
Dan MCleans, Deborah Williams
ஆகியார் சிறப்பு அதிதிகளாக கலந்து
சிறப்பித்தனர். அனைவர் முன்னிலையிலும் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றி நிகழ்வுகள் ஆரம்பித்தமை
இது முதன்முறை என்பது அனைத்து
தமிழர்களுக்கும் பெருமையான விடயம்.
ஆரம்ப நிகழ்வாக
கனேடிய அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் முதன் முதலாக,
ஒட்டுமொத்த தமிழக் குலத்தின்,மரபின் அடையாளமான
தமிழீழத் தேசியக் கொடி மற்றும்,கனேடியத் தேசிய கொடி என்பன ஏற்றப்பட்டு
நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது . கனடா வின் அனைத்து அரசியல் பிரமுகர்கள் , நூற்றுக்கணக் கான மக்கள் , கலைஞர்கள் , தமிழ்ச்சான்றோர், பங்கு பற்ற தமிழரின்
பாரம்பரிய வாத்தியமான பறை முழங்க,
நடன நிகழ்வுகளுடன் பேச்சு, கவிதை , தமிழரின் மரபுகள்பற்றியும் கலந்து கொண்டவர்கள் உரைநிகழ்தினார்கள்.
சிறப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் காணொளி வாயிலாகச் சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும்
பரிமாறப்பட்டன. சிறுவர்களின் சிலம்பாட்டம் அனைவரையும் மிகவும்
கவர்ந்தமை மிகவும் குறிப்பிடத்தக்கது
ஏற்றப்பட்ட இரண்டு தேசியக் கொடிகளும் இறக்கப்பட்டு நிகழ்வு
இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வுகளை பார்வையிட
Krishna Live tele (Face book), TVI,
வணக்கம் Toronto.

https://youtu.be/IYT8eeLkZUk

Leave a Reply