• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் - இராஜாங்க அமைச்சர்

இலங்கை

ஆய்வொன்றுக்காகவே சுற்றுலாக் கப்பலில் சென்றோம் என இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“அகில இலங்கை தொழிற் சங்கத்தின் தலைவர் ஒருவர் இந்த விருந்துபசாரத்திற்கு 25 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இன்னொரு இடத்தில் கோடிக் கணக்கில் இதற்கு செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. எனது சொந்த செலவிலேயே இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறான பொய்யான தகவல்களினால் தான், இந்த நாடு கடந்த காலங்களில் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது.

இந்த விருந்துபசாரத்திற்கான அனைத்து பற்றுச் சீட்டுக்களும் என்னிடம் உள்ளன. சென்வீட்ஜ், கேக், ரோல்ஸ் இற்காக 14, 790 ரூபாய் எனது சொந்த நிதியில் செலவிடப்பட்டது.

அத்தோடு, நான் இன்பச் சுற்றுலாவாக அங்கு செல்லவில்லை. ஆய்வொன்றுக்காகவே சென்றோம்.

வரவு- செலவுத்திட்ட விவாதத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைமுகத்தை பார்வையிட வேண்டும் என கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

இதனால்தான் நான் இந்த ஏற்பாடை செய்திருந்தேன். துறைமுகங்கள் மற்றும் கப்பற்போக்குவரரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடமும் இதற்காக நாம் அனுமதியை பெற்றிருந்தோம்.

இந்த நிலையில், உண்மைகளை மூடிமறைத்துதான், இந்த பொய்யான கதைகள் பரப்பப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply