• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொடிய வறுமையிலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்காத பாகவதர்

சினிமா

சிவாஜியே அழைத்தும் போகவில்லை: கொடிய வறுமையிலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்காத பாகவதர்

தியாகராக பாகவதர் நடித்த அம்பிகாபதி படத்தை கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.எஸ் சிவாஜியை வைத்து ரீமேக் செய்ய முடிவு செய்கிறார்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் தியாகராஜ பாகவதர் தான் வறுமையில் வாடிய காலக்கட்டத்தில் சிவாஜி நடிக்க அழைத்தும் அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாக இயக்குனர் கலைஞானம் தெரிவித்துள்ளார்.

1394-ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.எஸ் சிவாஜியை வைத்து ரீமேக் செய்ய முடிவு செய்கிறார். இந்த படத்தில் அம்பிகாபதி கேரக்டருக்கு தந்தையாக கம்பர் கேரக்டரில் நடிக்க தியாகராஜ பாகவதரை அணுகுகின்றனர்.

இந்த ஐடியாவை கேட்ட ஏ.எல்.எஸ் நல்ல யோசனை தான் என்று கூறி தியாகராஜ பாகவதரை அனுகுகிறார். இவருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் செல்கிறார். தியாகராஜ பாகவதரை இந்த கேரக்டருக்கு அழைக்க வேண்டும் என்று சொன்னதுமே அவர் ரொம்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு இந்த யோசனை நல்லா இருக்கு அவரை கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டு அவரும் கூடவே செல்கிறார்.

அந்த காலக்கட்டத்தில் தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் சில சரியாக போகவில்லை. இதனால் அவர் மீது என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கவலையாக இருக்கிறது. இதனால் அம்பிகாபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட வேண்டாம். பணம் அதிகமாக கிடைக்கும். சிவாஜியே உங்களை சொல்லி அழைத்து வர சொல்லியிருக்கிறார் என்று எஸ்.எஸ்.கே பாகவதரிடம் சொல்கிறார்.

இதை கேட்ட பாகவதர் என்.எஸ்.கே நான் பார்க்காத பணமா?  நான் பெறாத புகழா,? நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க. அதே அம்பிகாபதி படத்தில் நான் ஹீரோவாக நடித்தேன். அந்த படத்தின் மூலம எனக்கு ஏகப்பட்ட புகழ் தேடி வந்தது. இப்போ அதே அம்பிகாபதி படத்தில் அம்பிகாபதிக்கு அப்பானா நடிக்க கூப்பிடுறீங்களே இது நியாயமா? என்று கேட்க ஏ.எல்.எஸ் எழுந்து சென்றுவிட்டார்.

பாகவதரின் வார்த்தைகளை கேட்ட, எஸ்.எஸ்.கே என்னப்பா நீ பொழைக்க தெரியாத ஆளா இருக்க, சம்பாதிக்கிற வழிய பாருப்பா கௌரவம் எதுக்குபா? ஸ்ரீதேவி தேடி வரும்போது அதை வேண்டாம் என்று உதைக்கிறியேப்பா, என்று சொல்ல, அப்போவும் பாகவதர் சிரித்துக்கொண்டே வேண்டாம் என்று ஒதுங்கியுள்ளார்.
 

Leave a Reply