• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி ஜோடியாக அம்பிகா நடிப்பதா? எதிர்ப்பு தெரிவித்த ரஜினி - கமல் - சாதித்து காட்டிய தயாரிப்பாளர்

சினிமா

சிவாஜிக்கு ஜோடியாக அம்பிகா நடிப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜனிகாந்த் இருவருமே எதிர்ப்பு தெரிவித்ததாக தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று பெயரேடுத்து சிவாஜி பல முன்னணி நடிகைகளுடன் இணநை்து நடித்திருந்தாலும் நடிகை ராதா அவருக்கு ஜோடியாக நடிக்க ரஜினி மற்றும் கமல் இருவருமே எதிர்ப்பு தெரிவித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

க்ளாசிக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக முக்கிய இடத்தை பெற்றிருந்தவர் சிவாஜி கணேசன். எந்த கேரக்டராக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து சிறப்பாக நடிக்கும் சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற அடைமொழியும் உண்டு. நடிப்பு மட்டுமல்லாமல் தனது உடல்மொழியிலும் மாற்றங்களை செய்து இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு முக்கிய பாடமாக இருக்கிறார்.

அதேபோல் படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வர வேண்டும் என்பதை தனது இறுதிகாலம் வரை கடைபிடித்த சிவாஜி கணேசன், தான் நடிக்கும் காலத்தில் நாளைக்கு என்ன காட்சி படமாக்க போகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, அந்த காட்சிக்கான வசனம் குறித்த பேப்பரை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார். அடுத்த நாள் வரும்போது அந்த கேரக்டருக்கான மேக்கப்புடன் வரும் சிவாஜி வசனத்தை இரு முறை படிக்க சொல்லி கேட்டு ஒரே டேக்கில் நடித்து விடுவார்.

அதே போல் சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்த சிவாஜி கணேசன் ஒரு கட்டத்தில் தனது வயதுக்கு ஏற்ற தொற்றத்தில் நடிக்க தொடங்கினார். மேலும் தனது மகன் பிரபு உள்ளிட்ட அப்போதைய இளம் நடிகர்களுடன் சேர்ந்தும் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த சந்திப்பு, சுமங்கலி, வெள்ளை ரோஜா, உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான படம் தான் வாழ்க்கை. ராஜசேகர் என்ற கேரக்டரில் சிவாஜி தனது அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 

கடந்த 1983-ம் ஆண்டு இந்தியில் ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியான அவதார் என்ற படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படத்தில், நிழல்கள் ரவி, பாண்டியன், ஜெய்சங்கர், நம்பியார், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிகை அம்பிகா நடித்திருந்தார். பிரபல பத்திரிக்கையாளரும், சினிமா தயாரிப்பாளர் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் இந்த படத்தை தயாரித்திருந்தார். வி.சி.ராஜேந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு முன்னதாக சிவாஜி நடித்த சில படங்களுக்கு சுஜாதா அல்லது கே.ஆர்.விஜயா தான் ஜோடியாக நடித்து வந்தனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்து நடிகை அம்பிகாவிடம் பேசினோம் அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்பிகா இந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டார் நீங்கள் ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று பலரும் சொன்னார்கள்.

கமல்ஹாசன் சித்ரா நல்லா யோசிங்க, இரு சரியா வருமா என்று எனக்கு எச்சரிக்கை கொடுத்தார். அதேபோல் படப்பிடிப்பு தொடங்கும் 2 நாட்கள் முன்னதாக கூட சித்ரா நீங்கள் விஷப்பரிட்சை எழுதுறீங்க பாத்துக்கோங்க  என்று ரஜினிகாந்த் போன் செய்து சொன்னார். ஆனால் நான் எனது முடிவில் தெளிவாக இருந்தேன். இந்த படத்தை நான் இந்தியில் பார்த்த உடனே சிவாஜி இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து தான் ரீமேக் உரிமையை வாங்கினேன்.

அந்த நம்பிக்கையில் இந்த படத்தை எடுத்தேன். படமும் நன்றாக வந்து எனக்கு வெற்றியை கொடுத்தது. நான் அம்பிகாதான் நாயகி என்ற முடிவு எடுத்ததும் நன்றாக அமைந்தது என்று சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
 

Leave a Reply