• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கஷ்டமான டான்ஸ் ஸ்டெப்ஸ்... ஆட மறுத்த எம்.ஜி.ஆரிடம் அவருக்கே தெரியாமல் வேலை வாங்கிய பிரபல இயக்குனர்

சினிமா

அன்பே வா கதையை கேட்ட எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து போக இது என் படம் இல்லை உங்கள் படம் நீங்கள் எப்படி சொல்றீங்களோ அப்படி நடிக்கிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல புதுமையான கதைக்களத்துடன் படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.சி.திரிலோகச்சந்தர். 1952-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில வெளியான குமாரி என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர்,  1962-ம் ஆண்டு வெளியான வீரத்திருமகன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் நானும் ஒரு பெண், சிவக்குமார் அறிமுகமாக காக்கும் கரங்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். அதன்பிறகு 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் அன்பே வா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதையை ஏ.வி.எம் நிறுவனத்திடம் சொன்னபோது, இந்த கதையில் எம்..ஜி.ஆர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் சொல்ல, அவரின் தீவிர ரசிகரான ஏ.வி.எம் சரவணன் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசியுள்ளார்.

கதையை கேட்ட எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து போக இது என் படம் இல்லை உங்கள் படம் நீங்கள் எப்படி சொல்றீங்களோ அப்படி நடிக்கிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன், நாகேஷ், மனேரமா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.

இந்த படத்தில் புலியை பார் என்ற பாடலுக்கு சோப்ரா மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இதை பார்த்த எம்.ஜி.ஆர் அவர் சிறப்பாக வளைந்து நெளிந்து நடன அசைவுகளை அமைத்திருப்பார் என்னால் ஆட முடியாது என்று கூறியுள்ளார். மேலும் டான்சர்ஸ் வேறு யாரையாவது ஆட வைத்துவிட்டு க்ளோசப்பில் என்னை வைத்து மேட்ச் பண்ணிக்கலாம் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.

ஆனால் எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய டான்சர் என்பதை அறிந்த இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர், அவர் தான் இந்த பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். தொடர்ந்து அடுத்த நாள் காலை படப்பிடிப்புக்கு வந்த எம்.ஜி.ஆர், எங்கே அவர் ஆடியதை காட்டுங்கள் நான் அதற்கு ஏற்றபடி க்ளோசப்பில் ஆடி விடுகிறேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். ஆனால் யாரையும் வைத்து படமாக்காத இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர், அந்த ஃபுட்டேஜ் எங்க இருக்குனு தெரியால அவர்கள் ஆடியது எனக்கு நினைவு இருக்கிறது நீங்கள் ஆடுங்கள் மேட்ச் பண்ணிக்கலாம் என்று சொல்லி எம்.ஜி.ஆரை ஆட வைத்துள்ளார்.

பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட பின் தான் முழு பாட்டையும் நம்மை வைத்து தான் படமாக்கி இருக்கிறார் என்று எம்.ஜி.ஆருக்கு தெரியவந்துள்ளது. இதன்பிறகு ஏ,சி.திரிலோகசந்தர் எம்.ஜி.ஆர் ஆடிய காட்சிகளை எடிட் செய்து அவருக்கு காண்பித்து நீங்கள் தான் எப்படி சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறீர்கள் பெருமையாக பேசியுள்ளார்.
 

Leave a Reply