• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெய்சங்கர்- அந்த பிரபல நடிகை இடையே காதலா? எம்.ஜி.ஆர் நடத்திய நேரடி விசாரணை

சினிமா

ஜெய்சங்கரிடம் நேரடியாக விசாரணை நடத்திய எம்.ஜி.ஆர்; பிரபல நடிகையுடன் காதல் என்ற செய்தி குறித்து விளக்கிய ஜெய்சங்கர்.
ஜெய்சங்கர் மற்றும் எம்.ஜி.ஆர் உறவு குறித்தும், ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் நடத்திய விசாரணை குறித்தும் இப்போது பார்ப்போம்.
திரைப்பட இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் டூரிங் சினிமாஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகர் ஜெய்சங்கர் நாடகங்களில் நடித்தது முதல் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானவர். விஜயலட்சுமி, ஜெயலலிதா என பல்வேறு நடிகைகளுடன் ஜெய்சங்கர் நடித்து வந்த நிலையில், எம்.ஜி.ஆர் சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. உடனே எம்.ஜி.ஆரை பார்க்க சத்யா ஸ்டூடியோ விரைந்தார் ஜெய்சங்கர். அங்கு ஜெய்சங்கரை எம்.ஜி.ஆர் தனது அறைக்கு அழைத்துச் சென்று உணவு வழங்கினார்.

பின்னர் எம்.ஜி.ஆர் அந்த அறையில் இருந்த அனைவரையும் வெளியேறச் சொன்னார். இதனையடுத்து அந்த அறையில் எம்.ஜி.ஆரும் ஜெய்சங்கரும் மட்டும் இருந்தனர். இதனால் ஜெய்சங்கர் பதட்டத்துடன் காணப்பட்டார். அப்போது ஜெய்சங்கரிடம் நீங்கள் விஜயலட்சுமியை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா என எம்.ஜி.ஆர் கேட்டார். அப்போதைய காலக்கட்டத்தில் ஜெய்சங்கர் – விஜயலட்சுமி குறித்து வெளிவந்த செய்திகள் தான் அதற்கு காரணம்.
அதற்கு ஜெய்சங்கர், உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லிருக்காங்க. பத்திரிக்கைகள் தவறாக புரிந்துக் கொண்டு எழுதி வருகின்றன. நானும் விஜயலட்சுமியும் நல்ல நண்பர்கள். நான் அப்பா அம்மாவ சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்லியிருக்கிறார்.
அப்போது வெளியில் செய்திகள் வருவதால் தான் கேட்டேன். நீங்கள் விஜயலட்சுமியை கல்யாணம் செய்ய விரும்பினால் அது உங்கள் இஷ்டம். ஆனால், யோசித்து முடிவெடுங்கள். இப்படி வெளியில் செய்தி வருவது நல்லதல்ல என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார்.
பின்னர் ஜெய்சங்கர் தனது பெற்றோர் பார்த்த கீதா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமணத்திற்கு எம்.ஜி.ஆரை அழைக்கிறார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திருமணத்தில் எம்.ஜி.ஆரால் கலந்துக் கொள்ள முடியவில்லை. பின்னர் ஜெய்சங்கர் தம்பி திருமணத்தில் எம்.ஜி.ஆர் கலந்துக் கொள்கிறார்.

எம்.ஜி.ஆரும் ஜெய்சங்கரும் இப்படி பல்வேறு தருணங்கள் மூலம் மிகவும் நெருக்கமாகினர். பின்னர் எம்.ஜி.ஆர் தி.மு.க.,வில் இருந்தப்போது ஜெய்சங்கர் ஒரு உதவி கேட்டார். எம்.ஜி.ஆரால் எளிதாக செய்யக் கூடிய உதவி என்றாலும், சில காரணங்களால் செய்ய முடியவில்லை. இதற்காக ஜெய்சங்கர் வருத்தப்பட்டதை விட எம்.ஜி.ஆர் கூடுதலாக வருத்தப்பட்டார்.

பின்னர் ஒருநாளை எம்.ஜி.ஆரைச் சந்தித்தப்போது, திரையுலகில் உங்கள் செல்வாக்கு கூடிவந்தாலும், தி.மு.க.,வில் உங்கள் செல்வாக்கு குறைந்து வருவதாக ஜெய்சங்கர் கூறினார். ஆனால் ஜெய்சங்கர் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் சில நாட்களில் ஜெய்சங்கர் கூறியது உண்மைதான் என்று எம்.ஜி.ஆர் உணர்ந்துக் கொண்டார்.

 

Leave a Reply